Save Tamils

Wednesday, October 13, 2010

தெரிஞ்சுக்கோங்க.......banking ombudsman

சமீபத்தில் எனக்கு HSBC  வங்கியுடனான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் கடனட்டைக்காக வங்கியில் செலுத்த வேண்டிய தொகையை சரியான தேதியில் செலுத்திட்டேன். அப்ப ஒரு சம்பவம் நடந்துச்சு. அது என்னான்னா visa card transfer பன்றப்ப 34 பைசா round off ஆகி HSBC அக்கவுண்ட்ல 34 பைசா கம்மியா credit ஆயிடுச்சு. இது மாதிரி ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ-க்கெல்லாம் பைசாவில குறைஞ்சா நானும் கண்டுக்க மாட்டேன், அவுங்களும் கண்டுக்க மாட்டாங்க. அதே மாதிரி இந்த தடவையும் 34 பைசா குறைஞ்சத நானும் கண்டுக்கல.
                                             தற்செயலா HSBC ஆன்லைன் பேங்க்கிங்ல பார்த்தா 400 ரூபாய் ஃபைனும் 41 ரூபாய் சேவை வரியும் போட்டுருந்தாங்க. முதல்ல எனக்கு எதுக்காக ஃபைன் போட்டங்கன்னு புரியல. சரி என்னான்னு கேட்போம்னு வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு ஃபோன் போட்டேன். ஏன் ஃபைன் போட்டிங்கன்னு கேட்டேன். அவரும் கொஞ்சம் செக் பன்னி சொல்றேன் கொஞ்ச நேரம் காத்திருக்க சொன்னார். நானும் என்ன பிரச்சனையாயிருக்கும்ங்ற யோசனைல காத்திருந்தேன். அவரும் செக் பன்னிட்டு நீங்க சரியான தேதி கட்டிட்டிங்களான்னு கேட்டார். நானும் கட்டிடேன்னு சொன்னேன். அவரு திரும்பவும் செக் பன்ன நேரம் கேட்டார். நானும் காத்திருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு அந்த விசயத்த எங்கிட்ட சொன்னார். அத கேட்டதும் ச்சும்மா சுர்ர்ருன்னு கோபம் வந்துடுச்சு. விசயம் என்னான்னா அந்த 34 பைசா கட்டாததுக்குதான் 441 ரூபாய் தண்டம்னு. அந்த விசயத்த என்னால  சகிச்சிக்க முடியல. அவருகிட்ட 34 பைசாவுக்கு 441 ரூபாய் தண்டம் போடுவிங்களான்னு கேட்டேன். அவரும் தப்பு உங்களோடதுதான், அதனால தண்டம் கட்டித்தான் ஆகனும்னு கண்டிப்பா சொல்லிட்டார். நானும் கோபப்பட்டு அட்டையை உடனே ரத்து பன்னிடுங்கன்னு சொன்னேன். அவரும் சரி பணத்த கட்டிட்டு ரத்து பன்னிக்கொங்கன்னு சொல்லிட்டார். நான் முடியாதுன்னு சொல்லிட்டு ஃபோனை துண்டிச்சுட்டேன்.
                                                                   என்னால  சகிச்சிக்க முடியல. எதாச்சும் பண்ணனும்னு தோணுச்சு. பணத்த கட்டிடுடா, எதுக்கு பிரச்சனை, கட்டாட்டி அதுக்கும் ஃபைன் போடுவாங்க, பேசாம கட்டிடுன்னு ஏற்கனவே கடனட்டைல அடி பட்டவங்க சொன்னங்க. நானும் பாக்குறவங்ககிட்டல்லாம் புலம்பி தீர்த்துட்டேன்.
                                     அப்படித்தான் நம்ம கதாநாயகன் கலப்பை பதிவர் அண்ணன் ஜெயக்குமார் கிட்டயும் புலம்பினேன். அவரு கோவையில் பொதுத்துறை வங்கில மேலாளரா இருக்காரு. அவருதான், தம்பி 34 பைசாவுக்கு 441 ரூபாய் தண்டம்லாம் கொஞ்சமில்ல ரெம்பவே ஓவரு, நீ இத சாதரணமா விட்ராத.முதல்ல HSBC லயே ஒரு புகார் அனுப்புவோம். சரிவாராட்டி banking ombudsman-ல புகார் பண்ணலாம்னு சொன்னார். நானும் அது என்ன banking ombudsman-னு கேட்டேன். அது இந்த மாதிரி அநியாயம் நடந்தா தட்டி கேட்க Reserve Bank of India-ல உள்ள ஒரு அமைப்புனு சொன்னார். நானும் எதாச்சும் செய்யனும்னு சொல்லிட்டு HSBC லயே ஒரு புகார் அனுப்பிட்டு பதில் வராததினால banking ombudsman-லயும் புகாரை பதிவு பண்ணினேன்.
                                                அதுக்கப்புறம் எல்லாமே வேகமா நடந்துச்சு. 441 ஃபைன ரத்து பண்ணிட்டங்க. ஃபோன் மேல ஃபோன் போட்டு மன்னிப்பு கேட்டங்க.மின்னஞ்சல்லயும் மன்னிப்பு கேட்டாங்க. RBI-ல இருந்து ஃபோன் பண்ணி எல்ல்லாம் சரியாயிடுச்சா இப்ப மகிழ்ச்சியான்னு கேட்டங்க. கேசை முடிச்சுடலாம்னு கேட்டாங்க. நானும் மகிழ்ச்சி. முடிச்சுடுங்கன்னு சொல்லிட்டேன்.
                             

15 comments:

  1. தெரிஞ்சிகிட்டேன்,
    பயனுள்ள தகவல்,
    பகிர்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. Pona pohuthunu vidama kadasivarai poi jeithatharku oru salute sir

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.

    ReplyDelete
  4. @ துவாரக்
    தங்கள் வருகைக்கு நன்றி
    பகிர்வுகள் தொடரும்

    ReplyDelete
  5. @ வார்த்தை, LK, திங்கள் மற்றும் சத்யா

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி

    ReplyDelete
  6. @ கருவாச்சி
    இன்னும் நிறைய பேர் கொழுப்பை அடக்க வேண்டியதிருக்கு பாஸ்.

    ReplyDelete
  7. ஜெயக்குமார்October 16, 2010 at 2:51 PM

    கருவாச்சிக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள். முதல்ல பேங்க்ன்னா என்னன்னு தெரிஞ்க்கோங்க. நீங்க இருக்க இடத்துக்கு வந்து எல்லாத்தயும் குடுக்குறாங்கங்கறதுக்காக, எதுல வேனாலும் கையேழுத்து போட்டுட்டு என்ன ஏதுன்னே தெரியாம பயன்படுத்தினா இது மாதிரி பிரச்சினைதான். தனியார் வங்கிகள்லதான் நல்லா சேவை கிடைக்கும் என்கிற கருத்து இருக்கும் வரை, இது மாதிரியான் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். பொதுத்துறைய நம்புங்க!

    ReplyDelete
  8. neer makkalodu makkalaaga kalandha anniyan.. thanks for sharing.. sema badhiladi.. (i will share this blog link to my friends. hope you dont mind)

    ReplyDelete